தெலுங்கானாவில் குழந்தைகளை விற்பனை செய்த மோசடி கும்பல் கைது
தெலுங்கானாவில்(Telangana) உள்ள சைபராபாத்(Cyberabad) சிறப்பு நடவடிக்கைக் குழு, லட்சக்கணக்கான ரூபாய்க்கு மாநிலங்களுக்கு இடையே குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வந்த ஒரு குழுவை கைது செய்துள்ளது.
“இந்தக் குழந்தைகள் பிறந்து சில நாட்களே ஆகின்றன. கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று மாதப்பூர்(Madhapur) காவல் அதிகாரி ரித்திராஜ்(Rithiraaj) தெரிவித்துள்ளார்.
இந்தக் கும்பல் முதன்மையாக பணக்கார குழந்தை இல்லாத தம்பதிகளை குறிவைத்து ஒவ்வொரு குழந்தையும் சுமார் ரூ.15 லட்சத்திற்கு விற்றுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பில் ஈடுபட்ட 12 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 12 நபர்களில் முக்கிய குற்றவாளிகள், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மருத்துவமனை சார்ந்த முகவர்கள் அடங்குவர்.





