செய்தி விளையாட்டு

தோனி மட்டுமல்லாமல் மேலும் 2 வீரர்கள் பயன்பெற வாய்ப்பு

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு வீரர்களை தக்க வைக்கும் முறையில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் ஒரு uncapped வீரரை தக்கவைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.

அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத இந்திய வீரரை தேர்வு செய்ய வேண்டும்.

ஆனால் நடப்பு மெகா ஏலத்தில் uncapped வீரர் விதியில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றை பிசிசிஐ கொண்டு வந்திருக்கிறது.

அதன்படி இந்திய அணிக்காக கடைசி ஐந்து ஆண்டுகளில் ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கூட விளையாடாத வீரரை uncapped வீரராக கருதலாம் என பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி uncapped வீரராக கருதப்படுவார்.

இதனால் தோனிக்காக இந்த விதியை பிசிசிஐ மாற்றிவிட்டதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் தோனி மட்டும் இந்த விதியால் பயன்பெற போவதில்லை. மேலும் இரண்டு இந்திய அணி வீரர்கள் uncapped வீரராக அறியப்பட போகிறார்கள்.

அது யார் என்று தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பியூஸ் சாவ்லாவுக்கு தற்போது 35 வயது ஆகிறது.

அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆனால் இந்திய அணிக்காக அவர் கடைசியாக விளையாடியது 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் தான்.

இதனை அடுத்து கடந்த 12 ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

எனினும் பியூஸ் சாவ்லா தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

கடந்த ஐபிஎல் சீசனில் கூட பியூஸ் சாவ்லா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 11 போட்டியில் விளையாடும் 13 விக்கெட்களும், 2023 ஆம் ஆண்டு சீசனில் மும்பைக்காக 16 போட்டிகள் விளையாடி 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.

இதனால் சாவ்லாவுக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர் சந்தீப் சர்மாவும் இந்த புதிய விதி மூலம் பயன்பெறப் போகிறார்.

சந்தீப் ஷர்மா இந்திய அணிக்காக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

அவர் கடைசியாக இந்திய அணிக்கு 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு 9 ஆண்டுகளாக அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. எனினும் சந்திப் ஷர்மா இன்னும் ஓய்வு பெறவில்லை.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சந்திப் சர்மா 13 விக்கெட்களும், 2023 ஐபிஎல் சீசனில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார். புதிய விதி மூலம் சந்தீப் சர்மாவும் பயன்பட போகிறார்.

(Visited 58 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!