வட அமெரிக்கா

நியூயோர்க்கில் இலவச பரிசு வழங்குவதாக வெளியான அறிவிப்பு – மக்கள் குவிந்தமையால் பதற்றம்

நியூயோர்க் நகரில் பெரிய பரிசை இலவசமாக வழங்கப்போவதாக இணையத்தில் வெளியான தகவலையடுத்து ஆயிரக்கணக்கானோர் கூடியதால் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன் போது இந்த கூட்டத்தைக் கலைக்க நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் களமிறக்கப்பட்டனர்.

Kai Cenat நிறுவனம் நியூயார்க் நகரில் பெரிய பரிசு ஒன்றை வழங்கப்போவதாகத் தமது Instagram பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

New York park erupts in chaos as live streamer's giveaway goes awry - CNA

அவர் இலவசமாக PlayStation 5 கருவிகளை வழங்கவிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதியது. கடையின் கூரை, காரின் மேல் என எங்கும் மக்கள் அலைமோத ஆரம்பித்துள்ளனர்.

சிலர் போத்தல்களையும் நாற்காலிகளையும் தூக்கி வீசுவது ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகளில் தெரிகிறது.

எதனால் ஆரவாரம் தொடங்கியது என்பது தெரியவில்லை. செனட் வந்திருந்த காரையும் மக்கள் விட்டுவைக்கவில்லை. சம்பவ இடத்திலிருந்து கார் கிளம்பியபோது காரிலிருந்து ஒருவர் விழுந்தார்.

எத்தனைப் பேர் கைது செய்யப்பட்டனர் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!