இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூட நடவடிக்கை!
இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்வதில் இராஜதந்திர ஆதரவின்மை மற்றும் பணியாளர்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கான தூதரக சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான் அரசாங்கத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை, மேலும் காபூலில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டனர்.
புதுடில்லியில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், இந்திய அரசின் ஒப்புதலுடன் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அரசால் நியமிக்கப்பட்ட ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.