ஸ்பெயினில் உயிரிழந்த பெண் உயிர் பெற்ற அதிசயம் – இறுதிச் சடங்கில் விபரீதம்
 
																																		ஸ்பெயினில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட பெண் ஒருவர் அவருடைய இறுதிச்சடங்கின்போது உயிர்பெற்ற சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சம்பவம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Son Valenti இறுதிச் சடங்கு இல்லத்தில் பெண்ணின் உடலைத் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரது விரல்கள் அசைவதை ஊழியர்கள் கவனித்தனர். அவர்கள் உடனடியாகப் பணிகளை நிறுத்தினர்.
மருத்துவ அதிகாரிகள் அங்கு வந்தபோது, பெண் இன்னும் உயிருடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
catalepsy எனும் நரம்பியல் கோளாற்றின் அறிகுறி இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
(Visited 67 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
