நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் அதிகாரிகள் குழு
கலால் திணைக்களத்தின் உயர் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனம் செய்து இந்தக் குழு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக நிட்டம்புவ பிரதேசவாசி ஒருவர் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
எனவே, அவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.





