இலங்கையில் போதைப்பொருளுக்கு எதிரான பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : மனித உரிமைகள் அமைப்பு கவலை!
30,000 சந்தேக நபர்களை “தன்னிச்சையாக கைது செய்ய” வழிவகுத்த இலங்கையில் நடந்து வரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையும் உரிமை அமைப்புகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
தெற்காசிய தேசத்தில் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றிலுமாக ஒழிப்பதை இலக்காகக் கொண்டு டிசம்பர் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடவடிக்கை (யுத்திய நடவடிக்கையின்) ஒருபகுதியாக இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவ்வாறான கைது சம்பவங்கள், தன்னிச்சையாக இடம்பெறுவதாகவும், கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அங்கீகரிக்கப்படாத திடீர் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் நிறுவனம் சனிக்கிழமையன்று இந்த நடவடிக்கையை கடுமையாக சாடியது மற்றும் மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையுடன் அதன் மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.
இலங்கை பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம் என மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் டிசம்பர் 17 முதல் இதுவரையில் (16.01) ஏறக்குறைய 29000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சுமார் 1,500 பேர் பொலிஸ் காவலில் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 1600 பேர் கட்டாய போதை மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.