லண்டனில் தமிழ் இளைஞன் மரணம் – உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் பிரபல அரசியல்வாதியின் நெருங்கிய உறவினர்
தென்மேற்கு லண்டன் Twickenham பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் புதிதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 21 வயதுடைய அனோஜன் ஞானேஸ்வரன் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
காரைநகர் சின்னாலடியை சேர்ந்த ஞானேஸ்வரனின் மகனே இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். அனோஜன் ஞானேஸ்வரன் மூன்று பிள்ளைகளை கொண்ட குடும்பத்தின் மூத்த மகன் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை இரவு 11.55 மணியளவில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
19 வயதுடைய இருவர் மற்றும் 18 வயதுயடைவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த 19 வயது இளைஞன், 20 வயது இளைஞன் மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 16 வயது சிறுவன் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மக்களின் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV காணொளிகளை பொலிஸார் கோரியுள்ளனர்.
அதற்கமைய, விசாரணைக்கு உதவிய மக்களுக்கு தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த அனோஜன் ஞானேஸ்வரன், காலம் சென்ற மகேஸ்வரன் (முன்னாள் யாழ் , கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் ) மற்றும் விஜயகலா மகேஸ்வரனின் பெறா மகன் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, அனோஜன் ஞானேஸ்வரனின் நண்பர்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்தையடுத்து Twickenham பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அச்சத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/metpoliceuk/status/1744683792034377823
https://twitter.com/MPSRichmond/status/1744706807686213756
https://x.com/MPSRichmond/status/1744706807686213756?s=20
https://twitter.com/BTP/status/1744724856347001037?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1744724856347001037%7Ctwgr%5E4793c1a497edad3044bda6a980cf54593e1b63e8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.mylondon.news%2Fnews%2Ftransport%2Flive-south-western-railway-updates-28412966
தொடர்புடைய செய்தி
https://iftamil.com/the-fate-of-a-young-man-from-karainagar-jaffna-in-london/