பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய கேப்டன் விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி காய்ச்சல் காரணமாக போரூரில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சலுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்கு நுரையீரலில் தொற்றும் ஏற்பட்டது. சளியும் அதிகரித்தது. இதனால் அவர் மூச்சுவிட கூட முடியாமல் திணறினார்.
இதையடுத்து, விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர், விஜயகாந்த்தும் பூரண குணம் அடைந்து இன்று காலையில் வீடு திரும்பினார்.
நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது,
எனக்காக பிரார்த்தனை செய்து , வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். #தேமுதிக pic.twitter.com/riLgUtBOxo— Captain Vijayakant (@iVijayakant) December 11, 2023
இந்நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நான் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, எனக்காக பிரார்த்தனை செய்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.