ஸ்பெய்ன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்குள் நுழைய பிரித்தானியா விசா கட்டணம் செலுத்த வேண்டும்!
பிரெக்சிட்டில் இருந்து பிரித்தானிய விலகிய பிறகு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும்போது முன் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியப் பயணத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு (ETIAS) இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் செல்ல £6 (€7) செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா விலக்கு அளிக்கப்பட்ட 60 நாடுகளில் இருந்து 1.4 பில்லியன் மக்களுக்குக் கிடைக்கும் அனுமதியை, பிரித்தானியர்கள் பணம் கொடுத்த பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை வரும் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இது அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டது. இருப்பினும் சில தாமதங்களால் பிற்போடப்பட்டது.