காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மக்கள் எதிர்நோக்கவுள்ள ஆபத்து!
புவி வெப்பமடைதலின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மக்கள் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதீத வெப்பநிலை காரணமாகவும், காலநிலை சமநிலையற்ற தன்மை காரணமாகவும், மக்கள் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன்தாக்கம் அமெரிக்கா முழுவதும் மிகவும் அப்பட்டமாக உணரப்படுகின்றன.
அமெரிக்கர்கள் முன்னெப்போதும் இல்லாத காலநிலை மாற்றத்தை அனுபவித்துள்ளனர். CNN வெளியிட்ட அறிக்கையின்படி, கொலராடோ நதிப் படுகை 2000 மற்றும் 2021 க்கு இடையில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக 10 டிரில்லியன் கேலன் தண்ணீரை இழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுத.
இதனால் சுமார் 40 மில்லியன் மக்களுக்கு குடிநீர், நீர்ப்பாசனம் போன்றவற்றுக்கு தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். மில்லியன்கணக்கான அமெரிக்கர்களுக்கு உயிர்நாடியாக இருக்கும் நதியின் குறிப்பிடத்தக்க சரிவுக்கு மனிதர்களால் ஏற்படும் காலநிலை மாற்றம் பங்களித்துள்ளதாக UCLA இன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் நீர்வள ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, மேற்கில் உள்ள தீவிர வெப்பநிலை கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆற்றின் ஓட்டத்தில் 10% குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.