யாழில் 11மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவை மீட்ட கடற்படையினர்
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில், சுமார் 11 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை இன்றைய தினம் புதன்கிழமை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
வெற்றிலைக்கேணி கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மாமுனை பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து 35 கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மீட்கப்பட்ட கஞ்சாவை கடற்படை முகாமில் வைத்துள்ள கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
(Visited 15 times, 1 visits today)





