லிஸ்டீரியா நோய் குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தகவல்!
சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நாட்டில் இதுவரை லிஸ்டீரியா நோய் நிலைமை இனக்காணப்படவில்லை. எனவே இது குறித்து மக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில்இ லிஸ்டீரியா நோய் நிலைமை காணப்படுவதாக செய்திகள் வெளியாகின. லிஸ்டீரியாசிஸ் என்பது லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்ற பற்றீரியாவால் ஏற்படும் ஒரு நோய் நிலைமையாகும். உணவு மாதிரிகள் மற்றும் நீர் ஆகாரங்களிலிருந்து மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
அதற்கமைய அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு நடத்திய சோதனைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படிஇ லிஸ்டீரியோசிஸ் தற்போது நாட்டில் இல்லை என்றும் தேவையற்ற அச்சம் தேவையில்லை என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)