அணுவாயுதப் போர் தடுப்பு சக்தியை வலுப்படுத்துமாறு கிம் ஜாங் உன் உத்தரவு!
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளின் சோதனைகளை பார்வையிட்ட வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நாட்டின் அணு ஆயுதப் போர் தடுப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய மத்திய செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பரிசோதனை செய்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பார்வையிட்டுள்ளார்.
“இன்றைய ஏவுதல் பயிற்சியின் மூலம், தேசிய பாதுகாப்பிற்கான மிக முக்கியமான தொழில்நுட்பப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்,” என்று கிம் கூறியுதாக KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே இன்றைய தினம் கொரியா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது வடகொரியாவின் அணுசக்தி திட்டம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





