ரஜினியை பார்க்க முடியாமல் குடும்பத்தோடு வீதியில் நின்று அழுத பெண்!!
இந்தியாவில், தமிழ் நாட்டில் சினிமாவுக்காக நடிகர்களுக்காக உயிரையும் கொடுக்கத்தயாரான பலர் இருக்கின்றார்கள்
உயிரை கொடுத்தும் இருக்கின்றார்கள். அந்த அளவுக்கு சினிமாவில் ஊறிப்போய் இருக்கின்றார்கள்.
இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை கூறலாம். அதாவது விஜய் அரசியலுக்குள் வந்த பின் கரூரில் நடைபெற்ற மக்கள் கூட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஜய் நடத்திய கூட்டத்தை பார்ப்பதற்காக மட்டுமே லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடியது. இதில் கைக் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு சென்று பலியாக்கிய சோக சம்பவம் இடம்பெற்றது. உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 41ஐ கடந்தது.
இதேபோல் எத்தனை சோக சம்பவங்கள் நடந்தாலும் இந்த மக்கள் கூட்டம் திருந்தாது. இன்று தீபாவளியை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்தை பார்ப்பதற்கு வந்த ஒரு குடும்பம் பற்றி தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
இன்றைய தினம் நடிகர்களை பார்ப்பதற்காக அவர்களது வீட்டுக்கு முன்பு பலர் கூட்டம் கூடுவார்கள். அந்த வகையில் ரஜினியை பார்க்க ஒரு பெண் அவரது குழந்தைகளுடன் தொலைவில் இருந்து வந்துள்ளார்கள்.
இன்று காலை 5 மணி முதல் காத்து இருந்ததாகவும், ரஜினி சார் வருவதை அவர்களால் பார்க்க முடியாமல் போனதாகவும் கூறி அழுகின்றார்.
இவர்கள் ஏன் இப்படி செய்கின்றார்கள். எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டார்களா? அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக அழுது புலம்புகின்றார்.






