பூஞ்சை பரவல் – பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க நடவடிக்கை?
பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகள் உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க குடிமக்கள் பலர் மெக்சிகோவில் லிபோசக்ஷன், மார்பகப் பெருக்குதல் மற்றும் பிரேசிலியன் பட் லிப்ட் போன்ற அழகு ஒப்பனைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
இதற்காக மெக்சிகோ நாட்டை சேர்ந்த 2 மருத்துவ மையங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பலருக்கு மெனிங்கிடிஸ் எனப்படும் கொடிய பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பூஞ்சை பாதிப்பு இருப்பவர்களுக்கு மூளை காய்ச்சல், தலைவலி,வாந்தி, கழுத்து வலி மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்நிலையில் புஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. மேலும் சமீப காலங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 195 பேரை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதையடுத்து பூஞ்சை பரவலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகள் உலக சுகாதார அமைப்பை வலியுறுத்தியுள்ளன. மேலும் இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வு செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்கரெட் ஆன் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.