காஸாவில் சண்டை நிறுத்தம் கோரி இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் டெல் அவிவ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பேரணியில் சுமார் 1,00,000 பேர் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், காஸா நகரம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இது பிணைக் கைதிகளாக அங்கு சிறைக்கேட்பட்டுள்ள இஸ்ரேலியர்களுக்கு ஆபத்தாக இருக்கலாம் என ராணுவம் எச்சரித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஹமாஸிடம் இருக்கலாம் என கருதப்படும் 50 பேர் உட்பட பிணைக் கைதிகளை மீட்க சண்டை நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், காஸாவில் தொடரும் நிலைமையை கட்டுப்படுத்த அமெரிக்காவின் தலையீட்டையும் அவர்கள் கோரினர்.