டிராகனுக்கு ஆப்பு வைக்க வரும் 2 படங்கள்… பேர கேட்டாலே சும்மா அதிருதுல

பிப்ரவரி மாதம் தமிழ் சினிமா மலைபோல் நம்பி இருந்த அஜித்தின் விடாமுயற்சி படம் தோல்வியை தழுவியதை அடுத்து, காதலர் தினத்தை ஒட்டி வெளியான படங்களும் பெரியளவில் சோபிக்கவில்லை.
இந்த நிலையில் பிப்ரவரி 21ந் தேதி பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் மற்றும் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் போட்டி போட்டு ரிலீஸ் ஆகின.
இதில் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்ட வெற்றிப்படமாக டிராகன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறாது.
ஆனால் அப்படத்தின் வசூல் வேட்டைக்கு ஆப்பு வைக்க வருகிற பிப்ரவரி 28ந் தேதி தியேட்டர் சில படங்கள் வரவுள்ளன.
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் அகத்தியா. இப்படத்தில் நடிகர்கள் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ள இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் மர்ம மாளிகையை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
அகத்தியா படத்துக்கு போட்டியாக நடிகர் ஆதி ஹீரோவாக நடித்துள்ள சப்தம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை அறிவழகன் இயக்கி உள்ளார். ஈரம், வல்லினம் போன்ற ஹிட் படங்களை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, சிம்ரன், லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார். சத்தத்தை மையமாக வைத்து திகிலூட்டும் படமாக இந்த சப்தம் உருவாகி உள்ளது. இப்படம் பிப்ரவரி 28ந் தேதி திரைக்கு வருகிறது.