அநுரவுக்கு கிடைத்த வெற்றி – சர்வதேசத்திற்கு செய்தி வழங்கிய வடக்கு மக்கள்
இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து வடக்கு கிழக்கு மக்கள் காட்டிய வெற்றி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு முக்கியமானது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டின் 22 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.
அந்த மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றது. கடந்த தேர்தல்களில் வடகிழக்கு மக்கள்தெற்கில் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருக்கவில்லை.
இதன் விளைவாகவே சர்வதேச சமூகம் இலங்கையை சமத்துவ பிரச்சனைகள் உள்ள நாடு என்று அழைத்தது.
செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி பெறவில்லை.
எவ்வாறாயினும், இவ்வருட பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தி தமது வாக்குகளை வழங்கியமை இந்த நாட்டின் அரசியல் முகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு சிறந்த உதாரணமாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முடிவு இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் நடத்தையையும் மாற்றும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.