பாகிஸ்தானின் தலைநகரில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்!
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டையொட்டி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் வன்முறை சம்பவங்களை கருத்தில் கொண்டு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஷாங்காய் மாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையாக இஸ்லாமாபாத்தில் 03 நாட்கள் விடுமுறை அறிவிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளதுடன் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இதில் இந்திய வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய, சீனப் பிரதமர்கள் உட்பட 16 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் பல அரசியல் நெருக்கடிகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போதைய சூழல் மாநாட்டை நடத்துவதற்கு ஏற்றதல்ல என சில தரப்பினர் கருத்து வெளியிட்டிருந்தனர்.