கமலா ஹாரிஸுக்கு அதிகரிக்கும் ஆதரவு – ஆசிய அமெரிக்கர்களிடையே பெருகும் வரவேற்பு
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஆசிய அமெரிக்கர்கள், ஹவாய் மற்றும் பசிபிக் ஐலாண்டர் தீவுகளின் பூர்வகுடி மக்களிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஏஏபிஐ டேட்டா மற்றும் ஏபிஐஏவோட் நடத்திவரும் கருத்துக் கணிப்பில், பத்தில் ஆறு ஏஏபிஐ மக்கள் கமலா ஹாரிஸுக்கு சாதகமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்தே இந்தப் பிரிவு மக்களிடையே கமலா ஹாரிஸின் செல்வாக்கு அதிகரித்துவருவதாக இந்தக் கருத்துக்கணிப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.





