ரஷ்யாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது : வடகொரியா கருத்து!

உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியமை தொடர்பில் வடகொரியா கரிசனை வெளியிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் தாக்குதலின்போது அமெரிக்காவின் நீண்ட தூர பால்ஸ்டிக் ஏவுகணைகளை உக்ரைன் படத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் கவலையை தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
வீரமிக்க ரஷ்ய இராணுவத்தையும் மக்களையும் எந்தவொரு சமீபத்திய ஆயுதம் அல்லது இராணுவ ஆதரவுடன் அமெரிக்கா ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)