இங்கிலாந்தில் எளிய கடவுச் சொல் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை!
இங்கிலாந்தில் எளிதில் யூகிக்கக்கூடிய கடவுச் சொற்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இணையவழி குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறிப்பிட்ட நபரின் பெயர் அல்லது “12345” போன்ற பொதுவான கடவுச் சொற்களை வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலவீனமான கடவுச் சொற்கள் ஏறக்குறைய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகள் யூகிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடவுச்சொற்களை நிர்வகிக்கும் வலைத்தளமான NordPass வெளியிட்டுள்ள தகவலின் படி பெரும்பாலான பிரித்தானியர்கள் யூகிக்கக்கூடிய கடவுச் சொற்கள் அதாவது 12345 போன்ற கடவுச் சொற்களையே அதிகளவில் பயன்படுத்தியிருந்ததாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை இன்று (29.04) முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 1 visits today)