வட கொரியாவில் அமுலுக்கு வரும் மற்றுமொரு புதிய தடை – கடுமையாகும் தண்டனை
வட கொரியாவில், ஒரு தோள் பட்டையில் தொங்கும் பையை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அது சோசலிசத்திற்கு எதிரானதென கூறி அதனை பயன்படுத்துவர்களை அதிகாரிகள் தடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் முதலாளித்துவ தென் கொரியாவின் மக்களை பின்பற்றும் ஒரு செயலாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஒரு தோளில் பையுடன் பாடசாலை அல்லது வேலை செய்யும் வழியில் சிக்குபவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
இந்த சட்டத்தை மீறுபவர்களின் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன அல்லது சில சந்தர்ப்பங்களில் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,
மிகவும் தீவிரமான சந்தர்ப்பங்களில், மீண்டும் மீண்டும் அதிகாரிகளிடம் சிக்குபவர்கள் தண்டிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 7 times, 1 visits today)