8 ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வேண்டும் – எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்!
தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவிற்கு மத்தியில் தமக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கக் கோரியும் , வட்டி வீதம் மற்றும் வரி என்பவற்றைக் குறைக்குமாறும் வலியுறுத்தி இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
சுகாதார துற, கல்வித்துறை , பல்கலைக்கழகங்கள், அரச நிர்வாக சேவை, வங்கி, துறைமுகம், பெற்றோலியத்துறை, நீர் வழங்கல் துறை, தபால் சேவை உள்ளிட்ட அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையைச் சேர்ந்த சுமார் 40 தொழிற்சங்கங்கள் கடந்த முதலாம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.
8ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறித்த தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன.
அதற்கமைய தொழிற்சங்களினால் வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அரசாங்கத்தினால் எவ்வித பதிலும் வழங்கப்படாமையினால் இன்றிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட அவை தீர்மானித்துள்ளன.