புதிய ஏவுகணை தாக்குதல் – ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அழைப்பு
மேற்கு உக்ரைனில் ரஷ்யா புதிதாக உருவாக்கப்பட்ட “ஓரெஷ்னிக்” ஏவுகணையை பயன்படுத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க தனது நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது. தலைநகர் கியேவ் மற்றும் லிவிவ் நகரங்களை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை இரவு, நடத்தப்பட்ட தாக்குதல்களில் இந்த புதிய ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ எல்லைக்கு அருகில் இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதை, ஐரோப்பிய பாதுகாப்புக்கு “கடுமையான அச்சுறுத்தல்” என உக்ரைன் கூறியுள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் தகவலின்படி, […]













