அரசியல் இலங்கை செய்தி

சிறையில் அடைத்தால்கூட அஞ்சமாட்டோம்: ஜனாதிபதியின் சொந்த ஊரில் முழங்கிய நாமல்!

  • January 17, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். எம்மை சிறையில் அடைத்தாலும் அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் கூறினார். அநுராதபுரம், தம்புத்தேகமயில் இன்று (17) நடந்த அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு சூளுரைத்தார். 1988 மற்றும் 1989 களில் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போட வரவேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார். உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா திவாலாகவில்லை – கன்சர்வேடிவ் கட்சி ஒன்றுபட்டுள்ளதாக பாடெனோக் அறிவிப்பு

  • January 17, 2026
  • 0 Comments

உலகின் மிக வெற்றிகரமான மற்றும் வலுவான நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா இருப்பதாக கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பாடெனோக் (Kemi Badenoch) தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரொபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick) கன்சர்வேடிவ் கட்சியை விமர்சித்து, சீர்திருத்த UK கட்சியில் இணைந்தமை குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். வாக்காளர்களிடம் நாடு திவாலாகிவிட்டது என கூறுவது அவர்களை விரக்தியடையச் செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். சீர்திருத்த UK கட்சி குறித்து கருத்து தெரிவித்த அவர், அந்தக் கட்சி எதிர்மறை […]

இந்தியா செய்தி

நிதி ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- மோடிக்கு சவால் விடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

  • January 17, 2026
  • 0 Comments

பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை தடுப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசை இந்திய பிரதமர் மோடி நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி அரசு கொடுமையான மற்றும் இரக்கமற்றது எனவும் அவர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் பிரதமர் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2021 […]

உலகம்

ஈரான் போராட்டம் – 3000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

  • January 17, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்த போராட்டங்களில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் 2,885 பேர் போராட்டக்காரர்கள் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட  மனித உரிமைகள் அமைப்பொன்று  தெரிவித்துள்ளது. இதற்கிடையில், எட்டு நாட்களாக அமலில் இருந்த சர்வதேச முற்றுகை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டங்கள் தற்போது குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன.

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் ஆயுதமாக மாறியுள்ள “கல்வி”!

  • January 17, 2026
  • 0 Comments

கல்வியைக்கூட அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கு எதிரணி வந்துவிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். பேரிடரை வைத்து அரசியல் நடத்திய எதிரணி, தற்போது கல்வி மறுசீரமைப்பையும் குழப்ப முற்படுகின்றது. இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறினார். அத்துடன், கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கு முயற்சி இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் கல்வி மறுசீரமைப்பு நிச்சயம் நடக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

ஐரோப்பா செய்தி

ராப் பாடல் விவகாரம்- குற்றவாளியை திறந்தவெளி சிறைக்கு மாற்ற தடை

  • January 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் 16 வயது ஜிம்மி மிசன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜேக் ஃபஹ்ரியை திறந்தவெளி சிறைக்கு மாற்றுவதற்கு நீதித்துறை செயலாளர் டேவிட் லம்மி (David Lammy) தடை விதித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜிம்மி மிசனை கொலை செய்ததற்காக ஃபஹ்ரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுப்பு பாத்திரம் ஒன்றை எறிந்ததில் அது உடைந்து, மிசனின் கழுத்தில் உள்ள முக்கிய இரத்த […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி ஆபாசமாக்கப்டுவதையே நாம் எதிர்க்கின்றோம் – சஜித்

  • January 17, 2026
  • 0 Comments

“கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகளை நாம் எதிர்க்கவில்லை. மாறாக கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கையையே எதிர்க்கின்றோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல வேடிக்கையான சம்பவங்களைச் செய்து வருகின்றது. கல்விச் சீர்திருத்தங்கள் முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல் முறைசாரா முறையில் முன்னெடுத்து வருகின்றது. கல்வி மறுசீரமைப்பை நாம் வலியுறுத்தியபோது தேசிய மக்கள் சக்தி எம்மை விமர்சித்தது. ஆங்கிலம், சீனம், ஜப்பான் […]

உலகம்

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்!

  • January 17, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற ATR 42-500 விமானம் காணாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்காசர் நகருக்கு அருகே விமானம் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

உலகம்

ஆப்பிரிக்காவில் பணத்துக்காக நடந்த துப்பாக்கிச்சூடு – 07 பேர் பலி!

  • January 17, 2026
  • 0 Comments

தெற்கு ஆப்பிரிக்காவின் மாரிக்கானாவில் (Marikana) இன்று  நடந்த துப்பாக்கிச்சூட்டில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி முனையில் பணம் பறிக்க முயன்ற நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்தாரிகளை காவல்துறையினர் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 30 முதல் 50 வயதுடைய ஆறு ஆண்கள்  கொல்லப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.  

இலங்கை செய்தி

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினம்

  • January 17, 2026
  • 0 Comments

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினம் உலகளாவிய அறிவியல் மற்றும் கலாச்சார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “தூய நிலத்தின் நட்சத்திரம்” (Star of Pure Land) என அழைக்கப்படும் இந்த ரத்தினம் 3,536 கரட் நிறையுடையது. அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது. இந்த கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா […]

error: Content is protected !!