இந்தியா செய்தி

மும்பை உள்ளிட்ட பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசமானது

  • January 16, 2026
  • 0 Comments

இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளை பாஜக – சிவ சேனா கூட்டணி வசப்படுத்துகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இன்னும் சில மாநகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஐரோப்பா

Ukவில் ஆபத்தான முறையில் காணப்படும் அணுசக்தி பதுங்குக்குழி!

  • January 16, 2026
  • 0 Comments

பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழி ஒன்று கிழக்கு யார்க்ஷயரில் (Yorkshire) உள்ள டன்ஸ்டால் (Tunstall)  கடற்கரைக்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான கடல் அரிப்பு காரணமாக குறித்த பதுங்கு குழி  இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. 1959 ஆம் ஆண்டு அணுசக்தி போர் கண்காணிப்பு சாவடியாக கட்டப்பட்ட  இந்த பதுங்குக்குழி 1990 களில் கைவிடப்பட்டதாகவும், இப்போது பாறையின் விளிம்பில் ஆபத்தான முறையில் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த பகுதியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று யார்க்ஷயர் கவுன்சிலின் […]

புகைப்பட தொகுப்பு

டுபாயில் உயரமான கட்டிடத்தில் பொங்கலை கொண்டாடிய நயன்தாரா

  • January 16, 2026
  • 0 Comments

பொங்கல் தினத்தை தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் நயன்தாரா கொண்டாடி இருக்கிறார். டுபாயில், மிக உயரமான கட்டிடத்தில், நயன்தாரா பொங்கலை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.      

ஆப்பிரிக்கா

சூடானில் பட்டினி சாவு அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை! அவசர நிதியும் கோரல்!!

  • January 16, 2026
  • 0 Comments

போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானுக்கு கூடுதலாக நிதி உதவி வழங்கப்படாவிட்டால் அங்கு உணவு பஞ்சம் தலைதூக்கும் என ஐ.நா. UN எச்சரித்துள்ளது. சூடானில் Sudan 1000 நாட்களுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நீடிக்கின்றது. இந்நிலையில் சூடானில் பஞசம் போக்குவதற்காக ஐ.நாவின் உலக உணவு திட்டம் அமைப்பு WFP, 700 மில்லியன் டொலர்களை கோரியுள்ளது. பஞ்சம் மற்றும் இடம்பெயர்வைத் தடுக்கவே அவசர நிதியாக இது தேவைப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கும், துணை இராணுவக்குழுக்களுக்கிடையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் போரால் […]

கருத்து & பகுப்பாய்வு

நாடெங்கும் மரண ஓலம் : தெருவெங்கும் பிணக்குவியல்!

  • January 16, 2026
  • 0 Comments

ஈரானில் வலுவடைந்து வரும் போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை பிடித்துள்ளன. ஒருபுறம் ஈரானின் வன்முறையை ஒடுக்க ட்ரம்ப் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் தங்களின் சொந்த மக்களை கொன்று போராட்டத்தை ஒடுக்க நடப்பு அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நிர்கதியாகி நிற்பது அப்பாவி பொதுமக்கள் தான். ஈரானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கமே  மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ பிரதான காரணம். ஆனால் ஈரானிய அரசாங்கமோ இந்த போராட்டங்களுக்கு திரைமறைவில் இஸ்ரேலும், […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது பெயருக்கு மட்டுமா?  ரத்தத்தில் மூழ்கும் காசா

  • January 16, 2026
  • 0 Comments

தொடர்ச்சியான மனிதாபிமான நெருக்கடி மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு மத்தியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தது குறித்து காசாவில் உள்ள பலஸ்தீனியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குவது குறித்து அமெரிக்கா அறிவித்த போதிலும், இஸ்ரேலிய படைகள் காசா முழுவதும் கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து சுமார் 451 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை […]

ஆஸ்திரேலியா செய்தி

பிரித்தானியா செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு புதிய கட்டுப்பாடு

  • January 16, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டைப் பிரித்தானியா அல்லது ஐரிஷ் குடியுரிமை கொண்டவர்கள், இனி அவுஸ்திரேலிய கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது என புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த விதிகளின்படி, பயணிகள் செல்லுபடியாகும் பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டை வைத்திருக்க வேண்டும். அல்லது, அவுஸ்திரேலிய கடவுச்சீட்டில் ‘உரிமைச் சான்றிதழ்’ (Right of Abode) பெற்று இணைத்திருப்பது அவசியமாகும். புதிய மின்னணு பயண அங்கீகார முறை […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையில் அதிரடி வானிலை மாற்றம்

  • January 16, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் நீடித்த கடும் வெப்பமான வானிலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குயின்ஸ்லாந்து முதல் விக்டோரியா வரை பரவவுள்ள இந்த வானிலை மாற்றத்தினால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த வாரம் சிட்னி கடற்கரையில் நிலவிய உயர் அழுத்த மண்டலம் நகர்ந்துள்ளதால், ஜனவரி 15 முதல் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை செய்தி

மன்னார் பேசாலை கடலில் நீராட சென்ற மூவர் உயிரிழப்பு

  • January 16, 2026
  • 0 Comments

மன்னார் பேசாலை கடலில் நேற்று (15.01) மாலை நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன நான்கு பேரில் 3 பேர் உயிரிழந்தனர். காணாமற்போனவர்களில் இருவரது சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டது. அத்துடன் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காணாமற்போன மற்றுமொருவரின் சடலம் நேற்றிரவு கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 16 முதல் 18 வயதுடைய […]

ஐரோப்பா

UKவின் M6 மோட்டார் பாதை மூடப்பட்டுள்ளது : பயண தாமதங்கள் குறித்து எச்சரிக்கை!

  • January 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கிரேட்டர் மென்செஸ்டரில் (Greater Manchester)  இரு திசைகளிலும் M6 மோட்டார் பாதை இன்று தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மேற்படி பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக  ஜங்ஷன் (Junction) 26  மற்றும் 23 இல்   கடுமையான சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டிகள் ஏறக்குறைய 01 மணித்தியாலம் தாமதத்தை எதிர்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் மென்செஸ்டர் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட […]

error: Content is protected !!