உலகம்

தென்கொரியாவில் குடிசை வளாகத்தில் பரவிய தீ! பலர் வெளியேற்றம்!

  • January 16, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் கங்னம் (Gangnam) மாவட்டத்தில் உள்ள குடிசை குடியிருப்பு வளாகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த  250 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி தீ விபத்தால் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் சுமார் எட்டு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

ஒன்டன்செட்ரான் ஊசி மருந்து விவகாரம்: ஆய்வக அறிக்கை தாமதமாவது ஏன்

  • January 16, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான் (Ondansetron) ஊசி மருந்து தொடர்பான ஆய்வக அறிக்கையை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் இறுதியாக மௌனம் கலைத்துள்ளது. இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்ட இரு நோயாளிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 13-ஆம் திகதி அதன் நான்கு தொகுதிகள் மீளப்பெறப்பட்டன. இது குறித்த பரிசோதனைகள் சிக்கலானவை என்பதால் முடிவுகளை அவசரமாக வெளியிட முடியாது என ஆணையத்தின் தலைமை அதிகாரி டொக்டர் குமுது பண்டார தெரிவித்துள்ளார். தற்போது குறித்த மாதிரிகள் […]

அரசியல் இந்தியா

பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவர் யார்? 20 ஆம் திகதி வெளியாகிறது அறிவிப்பு!

  • January 16, 2026
  • 0 Comments

பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க.) BJP புதிய தேசிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா செயல்பட்டுவருகின்றார். இரு தடவைகள் அவர் இப்பதவியை வகித்துவிட்டார். அவருடைய தலைமைப் பதவி காலம் கடந்த வருடம் ஜூன் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இதனால் பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், இது விடயத்தில் பா.ஜ.க. மௌன […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் 2025-ஆம் ஆண்டில் 197 பாதசாரிகள் பலி

  • January 16, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் பாதசாரிகள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மட்டும் 197 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாகத் தேசிய சாலைப் பாதுகாப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். குறிப்பாக, நகர்ப்புறங்களில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் மற்றும் அவற்றில் பொருத்தப்பட்டுள்ள ‘புல் பார்கள்’ (Bull bars) விபத்துகளின் தீவிரத்தை அதிகரிப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. குறைந்த வேகத்தில் மோதினாலும், இந்த இரும்புத் தடுப்புகள் பாதசாரிகளின் தலை மற்றும் உடலில் […]

உலகம்

ஈரானின் அடக்கு முறையை நிவர்த்தி செய்ய அனைத்து வழிகளையும் பரிசீலிக்கும் அமெரிக்கா!

  • January 16, 2026
  • 0 Comments

ஈரானின் கொடூரமான அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது ட்ரம்ப்  தூதர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz) இவ்வாறு கூறியுள்ளார். ஈரானில் வலுவடைந்துள்ள போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான உதவிகள் வந்துக்கொண்டிருப்பதாக  ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களை தூக்கிலிடமாட்டோம் என ஈரான் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் […]

இந்தியா

பா.ஜ.க.– சிவ சேனா கூட்டணி வசமாகிறது மும்பை மாநகராட்சி!

  • January 16, 2026
  • 0 Comments

முப்பை மாநகராட்சியை பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் சாத்தியம் உருவாகியுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பா.ஜ.க. – சிவ சேனா கூட்டணி முன்னிலை வகித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று (15) நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மதியம் வரையிலான நிலைவரப்படி, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 869 தொகுதிகளில் பாஜக-சிவ […]

இலங்கை செய்தி

‘கடைசி இராஜதந்திர சந்திப்பு’ – விடைபெற்றார் அமெரிக்க தூதுவர்!

  • January 16, 2026
  • 0 Comments

தனது பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் Julie Chang , எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து பிரியாவிடை பெற்றுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்கு தூதுவர் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa பாராட்டு தெரிவித்தார். இலங்கை எதிர்கொண்ட அசாதாரண துயர் சம்பவங்களின் போது இலங்கைக்கு மனிதாபிமான ரீதியாகவும், […]

ஆஸ்திரேலியா செய்தி

விக்டோரியா காட்டுத்தீ பேரழிவு ; சுயாதீன விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

  • January 16, 2026
  • 0 Comments

விக்டோரியாவில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் காட்டுத்தீ தொடர்பாக முறையான மற்றும் சுயாதீனமான மறுஆய்வு நடத்தப்படும் என பிரதமர் ஜெசிந்தா ஆலன் உறுதியளித்துள்ளார். 4 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு மற்றும் 260 வீடுகள் உட்பட சுமார் 900 கட்டிடங்களைச் சாம்பலாக்கியுள்ள இந்தக் காட்டுத்தீயால், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் தயார்நிலை குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவசரநிலை மேலாண்மை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தலைமையில் […]

அரசியல் இலங்கை செய்தி

நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்: யாழில் ஜனாதிபதி சபதம்!

  • January 16, 2026
  • 0 Comments

நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சிலர் முற்படுகின்றனர். அதற்கு இடமளிக்கமாட்டோம். இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார். “ போரின்போது வடக்கில் பல வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த வீடுகள் இன்னும் முழுமையாக மீளமைக்கப்படவில்லை. போர் காலத்திலும் இடம்பெயர்ந்து வாழ்தனர். தற்போதும் இடம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலை. தமக்கென வீடொன்று இன்மையே இதற்கு பிரதான காரணமாகும். எனவே, போரால் இடம்பெயர்ந்த […]

ஆஸ்திரேலியா செய்தி

விக்டோரியாவில் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து

  • January 16, 2026
  • 0 Comments

விக்டோரியா மாநில பொது மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரம் சார்ந்த ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால், ஆயிரக்கணக்கான திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் வழங்க முன்வந்துள்ள 3.75 சதவீத சம்பள உயர்வு போதுமானதல்ல எனக் கூறி, 6 சதவீத உயர்வைக் கோரி துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அறுவை சிகிச்சை கருவிகளைக் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் முடங்கியுள்ளதோடு, அவசரமற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை சிகிச்சைகள் முற்றாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. […]

error: Content is protected !!