இலங்கை – மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் ரணில் மேற்கொண்டுள்ள முதல் நடவடிக்கை!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். கட்சி மாநாடும் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், கோட்டை நீதவான் நிலுபுலி […]













