சீனாவை உலுக்கிய சிக்குன்குனியா – ஆயிர கணக்கானோர் பாதிப்பு
தென் சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா நோய்த் தொற்றுகள் கடந்த சில வாரங்களில் வேகமாக அதிகரித்து, பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த வைரஸ், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் கடித்ததன் மூலம் மனிதர்களிடம் பரவுகிறது. காய்ச்சல் மற்றும் கடுமையான மூட்டு வலி போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்துகிறது. எனினும், இறப்புகள் குறைவாகவே நிகழ்கின்றன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் […]













