இலங்கை

இலங்கையில் மின் கட்டண குறைப்பு – இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை!

  • February 28, 2024
  • 0 Comments

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடியிருந்த நிலையில் எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவு பெற்றுள்ளது. எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா

புட்டினுடன் தொடர்புடைய மேற்கில் நிதிப் பாய்ச்சல்கள்: விசாரணைக்கு அழைப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடைய மேற்கில் உள்ள நிதிப் பாய்ச்சல்களை விசாரிக்குமாறு ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயா வலியுறுத்தியுள்ளார் . நவல்னயா தனது கணவர் ரஷ்ய தண்டனைக் காலனியில் திடீரென இறந்த 12 நாட்களுக்குப் பிறகு ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார். “புடின் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலின் தலைவர். நீங்களும் நாங்கள் அனைவரும் குற்றவாளி கும்பலை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மெக்வாரி தீவுப்பகுதியில் ரிக்டர் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம்

  • February 28, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த தீவுப்பகுதியில் இன்று காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இங்கிலாந்தில் உயிரிழந்த டினாலின் மர்ம மரணம் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்..

  • February 28, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் வசித்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டினால் டி அல்விஸ் என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பான தகவல்களே வௌியாகியுள்ளன. க்ராய்டனில் உள்ள விட்கிஃப்ட் பாடசாலையில் கல்வி கற்ற டினால் ஒரு சிறந்த மாணவராவார்.பாடசாலையில் சிறந்த கால்பந்து மற்றும் ரக்பி வீரரான டினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். இந்தக் கனவுகள் […]

ஐரோப்பா

ஆயுத உற்பத்தியில் பலவீனமடைந்துள்ள ஐரோப்பா : விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!

  • February 28, 2024
  • 0 Comments

ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் முன்வைக்கப்படும் பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளிப்பதற்காக ஒரு புதிய பாதுகாப்புத் துறை மூலோபாயத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உயர் அதிகாரி அழைப்பு விடுத்தார். ரஷ்ய படையெடுப்பு ஐரோப்பாவின் ஆயுத உற்பத்தி திறன்களில் வெளிப்படையான பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது. உறுதியான உத்தரவுகள் இல்லாமல் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்யத் தயக்கம், பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க மெதுவாக உள்ளது, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

இந்தியா

மணிப்பூரில் பதற்றம் : 200 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கும்பலினால் காவல்துறை அதிகாரி கடத்தல்

சுமார் 200 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத் திருட்டு தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி, 6 சந்தேக நபர்களை கைது செய்ததை அடுத்து இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று (27) , மணிப்பூர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் சுமார் 200 ஆயுததாரிகள், பொலிஸ் அதிகாரியின் வீட்டைச் சுற்றி […]

இந்தியா

மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட நோயாளி… நுரையீரலில் இருந்த கரப்பான் பூச்சியால் அதிர்ந்த மருத்துவர்கள்!

  • February 28, 2024
  • 0 Comments

கேரளாவில் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது கழுத்து பகுதியில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பிராணவாயு செலுத்துவதற்காக டியூப் அமைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டிற்கு சென்று வீட்டிலேயே […]

இலங்கை

IMF இன் இரண்டாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

  • February 28, 2024
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்  3வது தவணை தொடர்பான இரண்டாவது மீளாய்வை மார்ச் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். IMF பிரதிநிதிகள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை நடத்துவார்கள் என்று நம்பப்படுகிறது என்று நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார். அரசாங்கத்தின் நிதி நிலைமை […]

இலங்கை

தம்புள்ளை- வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்த நபர்..!

  • February 28, 2024
  • 0 Comments

தம்புள்ளை, வேவலவெவ பிரதேசத்தில் வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு நேற்று (27) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 45 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் தனது மனைவியைப் பிரிந்து தாயுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

உலகம்

தனது போலீஸ் பாதுகாப்பின் சட்ட சவாலை இழந்த இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி, பிரித்தானியாவில் இருக்கும் போது தனது பொலிஸ் பாதுகாப்பை நீக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவிற்கு எதிரான தனது சட்டப்பூர்வ சவாலை இழந்துள்ளார். மன்னர் சார்லஸின் இளைய மகன் ஹாரி, பிரித்தானியாவில் இருக்கும் போது தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பைப் பெறுவதைத் தானாக நிறுத்திக்கொள்வதாக பிப்ரவரி 2020 இல் உள்துறை அலுவலகம் – காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சகம் முடிவு செய்ததை அடுத்து, லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். இளவரசர் ஹாரி தனது சட்ட நடவடிக்கையை […]

error: Content is protected !!