விளையாட்டு

முக்கிய தொடரில் இருந்து விலகிய CSK வீரர் டெவோன் கான்வே

  • February 28, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவான் கான்வே விலகி உள்ளார். […]

பொழுதுபோக்கு

“ராயன்” இன்று யாருடைய கேரக்டரை தனுஷ் வெளிப்படுத்தினார்…?

  • February 28, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷின் இயக்கத்தில் டி50 படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ், அடுத்தடுத்து படத்தின் இணைந்துள்ள நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இன்றைய தினமும் ராயன் படத்தின் அடுத்த கேரக்டரை தனுஷ் அறிமுகப்படுத்தியுள்ளார். நடிகர் சரவணன் கேரக்டர் போஸ்டரை […]

உலகம்

இங்கிலாந்தில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக ஆறாவது நபர் மீதும் குற்றச்சாட்டு

இங்கிலாந்தில் இயங்கி வரும் சந்தேகத்திற்குரிய ரஷ்ய உளவு வளையத்தின் ஒரு பகுதியாக இருந்ததாக ஆறாவது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேற்கு லண்டனில் உள்ள ஆக்டனைச் சேர்ந்த 38 வயதான பல்கேரிய நாட்டைச் சேர்ந்த திஹோமிர் இவனோவ் இவான்செவ், இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். “ஆவணங்கள் அல்லது தகவல்களைப் பெற, சேகரிக்க, பதிவு செய்ய, வெளியிட அல்லது தொடர்பு கொள்ள சதி செய்ததாக” அவர் குற்றம் சாட்டப்பட்டார். இதே குற்றத்திற்காக குற்றம் […]

இலங்கை

வருடத்தின் இரு மாதங்களில் பதிவான மனிதக் கொலைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மனிதக் கொலைகள் தொடர்பான சம்பவங்களில் 83 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 310 கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் […]

இந்தியா

மத்திய பிரதேசத்தில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

  • February 28, 2024
  • 0 Comments

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் ஆட்டிறைச்சி சந்தை உள்ளது. இதனால் அந்த பகுதியை சுற்றிலும் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளன. இந் நிலையில் சம்பவத்தன்று சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சிறுவனை சுற்றி வளைத்த தெருநாய்கள் பயங்கரமாக தாக்கியுள்ளன. அப்போது விரைந்து வந்த சிறுவனின் பாட்டி, நாய்களின் பிடியில் இருந்து சிறுவனை விடுவித்தார். ஆனால் […]

இலங்கை

சிலாபத்தில் புகையிரத பாதையை மறித்து மக்கள் போராட்டம்!

கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தையடுத்து, பிரதேசவாசிகள் புகையிரத பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புகையிரதம் புத்தளத்திற்கும் சிலாபத்துக்கும் இடையில் உள்ள புலிச்சகுளத்தில் நிறுத்தி கொழும்பு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முற்றுகையால் புகையிரதம் ஸ்தம்பிதம் அடைந்ததுடன், அதன் பயணத்திற்கு இடையூறு ஏற்பட்டதோடு, கொழும்பு – கோட்டையிலிருந்து சிலாபம் வரையிலான பாதையில் பயணிக்கும் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

பொழுதுபோக்கு

‘துருவ நட்சத்திரம்’ வெளியீடு குறித்து கவலை வெளியிட்டுள்ள கெளதம் மேனன்

  • February 28, 2024
  • 0 Comments

இயக்குநர் கெளதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து புலம்பியுள்ளார். இந்த விஷயம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குநர் கெளதம் மேனனின் காதல் படங்களுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவரது இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது கூட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்புக் கொடுத்தனர். இந்தப் படம் மட்டுமல்லாது, ‘வாரணம் ஆயிரம்’, […]

ஆசியா

மக்களை பட்டினியால் கொல்லும் இஸ்ரேல்: கத்தார் குற்றச் சாட்டு

“பாலஸ்தீன மக்களை வேண்டுமென்றே பட்டினியால் வாடுவதற்கு” இஸ்ரேல் உதவுவதாக கத்தார் குற்றம் சாட்டியுள்ளது. மற்றும் சர்வதேச சமூகத்தை இஸ்ரேல் மீது அதிக அழுத்தத்தை பிரயோகிக்க அழைப்பு விடுத்துள்ளது, உதவி வழங்குவது இன்னும் ஒரு பிரச்சினையாக இருப்பது “வேதனைக்குரியது” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி கூறியுள்ளார். இரண்டரை மில்லியன் மக்கள் சுகாதார மற்றும் அவசர சேவைகள் இல்லாத நிலையில் வாழ்கின்றனர். தடையின்றி உதவிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பொழுதுபோக்கு

பிரபல காமெடி நடிகர் அடடே மனோகர் காலமானார்…

  • February 28, 2024
  • 0 Comments

பழம்பெரும் நாடக நடிகரும், தொலைக்காட்சி நடிகருமான அடடே மனோகர்… சமீப காலமாகவே வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுவரை சுமார் 3000-திற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானவர் முரளி மனோகர் என்கிற அடடே மனோகர். மேடை நாடகங்களை தொடர்ந்து சீரியல், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மற்றும் ஏராளமான திரைப்படங்களிலும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இவர் நடித்த, ‘அடடே மனோகர்’ […]

ஐரோப்பா

ஒரே ஒரு புகைப்படத்தால் 7கோடி ரூபாய் காப்பீட்டு தொகையை இழந்த அயர்லாந்து பெண்மணி

  • February 28, 2024
  • 0 Comments

அயர்லாந்தில் வசிப்பவர் கமிலா கிராப்ஸ்கா,அவருக்கு வயது 36. 2017ல், கமிலா, ஒரு கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு கழுத்து பகுதியிலும், முதுகு தண்டிலும் ஏற்பட்ட காயங்களால் 5 வருடங்கள் செயல்பட முடியாமல் இருந்ததாகவும், அவரால் தன் குழந்தைகளுடன் கூட விளையாட முடியவில்லை என கூறி கார் விபத்தின் காரணமாகத்தான் இந்த செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்து காப்பீட்டு நிறுவனத்தில், இழப்பீட்டு தொகையை கோரினார். கமிலா கோரிய ரூ.7 கோடியை ($8,20,000) அவர்கள் தர மறுத்ததால், கமிலா […]

error: Content is protected !!