யாழில் வறுமையில் வாடும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிப் பெண்கள் வறுமை நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித் துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானையில் 157 பேர், தெல்லிப்பழையில் 139 பேர், யாழ்ப்பாணத்தில் 138 பேர், கரவெட்டியில் 128 பேரும், சாவகச்சேரியில் 118 பேரும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 பேரும், மருதங்கேணியில் 98 பேரும், சண்டிலிப்பாயில் 97 பேரும், நல்லூரில் 91பேரும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 பேரும் என மொத்தமாக 1814 பேர் வறுமையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.