ஜப்பானில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையம் அமைக்க தி்ட்டம்!
ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை மற்றும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி தொழில் தேடுபவர்களுக்கு அந்த பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்க ஜப்பானிய தொழிலாளர் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.