தொடர்ந்து ஆறாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக முன்னேறிய பின்லாந்து, ஜூன் 12 முதல் 15 வரை நடைபெறும் ‘மாஸ்டர் கிளாஸ் ஆஃப் ஹேப்பி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டின் சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான விசிட் ஃபின்லாந்தின் படி, மொத்தம் 10 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம், இதில் நாட்டின் லேக்லேண்ட் பகுதியில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் நான்கு நாட்கள் தங்கலாம்.