அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)