செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுவற்றில் துளையிட்டு தப்பிய கும்பல்!

அமெரிக்காவில் சிறையின் சுவரை பல் துலக்கும் பிரஷ் கொண்டு துளையிட்டு இரு சிறைவாசிகள் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான விர்ஜினியாவில் உள்ள ஜெயிலில் இருந்து இரு கைதிகள் தப்பித்துவிட்டதாக நியூபோர்ட் ஷெரிப் அலுவலகம் அபாய எச்சரிக்கை அளித்தது.

இதனால், சிறைக்காவலர்கள் அந்த கைதிகள் இருந்த அறையை சென்று பார்த்துள்ளனர்.

அங்குள்ள சுவற்றில் ஒரு நபர் வெளியே செல்லும் அளவில் மிகப்பெரிய துளை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதன் வழியாக கார்சா மற்றும் நெமோ என்ற இரு கைதிகள் தப்பிவிட்டதாக நியூஸ்போர்ட் ஷெரிப் டேவிட் ஹுக்க்ஸ் கூறியுள்ளார்.

இதனிடையே அவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அங்குள்ள IHOP உணவகம் ஒன்றில் இருப்பதை அறிந்த பொலிஸார்? அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

அவர்கள் இரண்டு பேரும் சுவற்றில் பலவீனமான இடத்தை கண்டறிந்து, தப்பிக்க பல் துலக்கும் ப்ரஷ் மற்றும் கூர்மையான உலோக பொருட்களை கொண்டு சுவற்றில் துளையை ஏற்படுத்தி தப்பி உள்ளனர் என்று நியூபோர்ட் ஷெரிப் டேவிட் ஹுக்க்ஸ் தெரிவித்தார்.

(Visited 7 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!