அவசரமாகத் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம்
சீனாவின் ஷங்ஹாய் நகருக்குச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சரக்கு விமானம், ஹொங்கொங்கில் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.
சிங்கப்பூரிலிருந்து நேற்றிரவு முன்தினம் புறப்பட்ட SQ7858 விமானத்தில், தீ ஏற்பட்டது.
இதற்கான எச்சரிக்கை ஒலி எழுந்ததாக நிறுவனம் குறிப்பிட்டது.
விமானி, விமானத்தைச் சோதித்துப் பார்த்தபின் அதைத் தரையிறக்க முடிவெடுத்தார்.
உள்ளூர் நேரப்படி, இரவு மணி சுமார் 10.50க்கு ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில், அவர் பாதுகாப்பாக விமானத்தைத் தரையிறக்கினார்.
பின்னர் நடத்தப்பட்ட புலனாய்வில், விமானத்தில் தீயோ புகையோ மூண்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் விமானத்துக்காக ஓர் ஓடுபாதையை மூடியதாகவும் அங்கு தரையிறங்கவிருந்த 9 விமானங்களை மற்ற ஓடுபாதைகளுக்குத் திருப்பிவிட்டதாகவும் கூறப்பட்டது