ரணில் மீண்டும் ஜனாதிபதி ஆவாரா?
முதலில் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டபோதும் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கே திட்டமஜடப்பட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படி அடுத்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றை கலைக்கவேண்டிய சூழ் நிலையும் அவசியமும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருப்பதாகவும் எனவே பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்த ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படலாமென எதிர்வு கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் (5.8.2023) நடைபெற்ற பொதுத் தேர்தலின் பதவிக்காலம் 2025 ஆவணியுடன் முடிவடைகிறபோதும் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் டிசம்பருக்குள் நடத்தியாகவேண்டும். எனவே அதற்குரிய ஏற்பாடுகள் அடுத்த வருடம் முற்பகுதியிலிருந்தே ஆரம்பிக்கவேண்டியது அவசியம்.
ஜனாதி பதி தேர்தலா பொதுத்தேர்தலா என்பதை தீர் மானிப்பதில் ஜனாதிபதிக்கு பல்வேறு சிக்கல்கள் காணப்படுகிற தென்பது வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படுகிற விடயம் ஏலவே மாகாண சபை தேர் தல் நடத்தப்படாமை வேட்பு மனு கோரப்பட்டிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் நடத்துவதற்கான இழுத்தடிப்புக்கள் ஜனாதிபதிமீது எதிர்க்கட்சிகள் வசைபாடுவதற்கு காரணங்களாக அமைந்து காணப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையில் அனைத்து தேர்தலுக்குமுன் பொதுத்தேர்தலை முன்னுக்கு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறதென்ற செய்தி புதிய பிரச்சனைகளுக்கு வித்திடலாம். பொதுத்தேர்தல் நடத்துவதற்கான முடிவுக்கு வரவேண்டுமாயின் பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும். அந்த அதிகாரம் இருந்தாலும் கலைப்பை எதிர்க்க பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
காரணம் பதவிக்காலத்துக்கு முன் கலைப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். பலபேர் பாராளுமன்றுக்கு புதியவர்கள் மாத்திரமல்ல அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோமா இல்லையா என்று சந்தேகத்துடன் இருப்பவர்கள். இவர்கள் பதவிக்;காலத்துக்கு முன் போகவேண்டி வந்தால் பல சலுகைகளை இழக்கவேண்டிவரும். அதுவுமன்றி பாராளுமன்றத்துக்குள் இருக்கும் தேசியக்கட்சிகள் பிரதேச கட்சிகள் சிறு கட்சி உறுப்பினர்கள் அங்கமிங்குமாக கட்சி தாவி நிக்கிற நிலையில் பாராளுமன்றம் மறை முகமாக பலம் இழந்து காணப்படுவதுடன் ஜனாதிபதி பலமற்ற ஒரு பிரகிருதியாகவே பாராளமன்றத்தில காணப்படுகிறார்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் ரணிலவிக்கிரம சிங்க வெல்லும் சாத்தியம் இருப்பதாக சொல்ல முடியாது. நாட்டை இக்ககெட்டான நிலையிலிருந்து மீட்டவர் என்ற ஒரு காரணம் அல்;லது நீண்ட அனுபவம் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியர் என்ற காரணங்கள் மட்டும் வெல்வதற்கான காரணிகளாக இருக்க முடியாது என்பது பழுத்த அரசியல் வாதியான ரணிலுக்கு தெரியாத ஒரு விடயமல்ல. போட்டியில் எதிரே நிற்கப்போகிறவர்கள் யார். ஆதரிக்கப்போகும் கட்சிகள் எவை என’பதில் தான் சாதக நஜலை வெளிப்படும்.
அடுத்த ஜனாதிhதி தேர்தலில் போட்டியிடுவதற்க பலர் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.. அவர்களின் பலம் வாக்குப்பலம் செல்வாக்கு என்பன இங்கு முக்கியம் பெறப்போகிறது. ஏலவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தொற்றுப்போனவர் ரணில். அதமட்டுமன்றி தனமீத நம்பிக்கையற்று வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுத்தவரும் கூட. வழமையாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் 10 மேற்பட்டவர்கள் போட்டியிட்ட அனுபவம் இலங்கைக்குண்டு. இருந்த போதிலும் போட்டி என்பது இரு முனையாக மும் முனையாக இருப்பதே வழக்கம்.
தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக போட்டியிட இருக்கும் போட்டியாளர்களை தற்போதைய தகவலின்படி பார்ப்பின் இவருக்கு நேர் ஒத்தவராக தற்போது காணப்படுகிறவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாஸ. இவர் கங்கணம் கட்டியபடியே காணப்படுகிறார். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் உடன்பாடு காணப’படும் என்ற சமிஞ்சை இதுவரை தென் படவில்லை. மறு புறத்தே மக்கள் மத்தியில் புதிய கனவுகளை விதைத்துக்கொண்டிருக்கம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரா குமார திஸநாயக்க. இவர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துவருகிறார். இன்னொரு ஓரத்தில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் தலைவருமாகிய மைத்தரிபால சிறி சேன சூளுரைத்து வருகிறார்.
கோத்தபாயாவின் நெருங்கிய நண்பரும் பிரபல தொழிலதிபரும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவருமாகிய திலித் ஜெயவீர மற்றும் பொஜன பெரமுன சார்பில் பஷில் ராஜபக்ஷவோ அன்றி சமல் ராஜபக்ஷவோ அதிசயமாக நாமல் ராஜபக்ஷவோ களமிறக்கப்படலாம் . இந்த குதிரைகளை தோற்கடிக்கும் சூழ் நிலை உருவாகினால் மட்டுமே ரணில் விக்கிரம சிங்க தேர் தலில் வெற்றி பெற்று மீண்டும் அந்த கதிரையில் அமர முடியும். துரதிஷ்டவசமாக அச்சூழ்நிலை காணப்படாத காரணத்தினாலையே தனது நிகழ்சி நிரலை மாற்றி பொதுத் தேர்தலை நடத்தப்பார்க்கிறார் ஜனாதிபதி என்று காரணத்தை கற்பித்முக்கொள்ளலாம். இதற்கு நடுலில் முன்னாள் ஜனாதிபதி கோத்தா மீண்டும் குதிக்கப்போகிறார் என்ற கதைகளும் தாறு மாறாக அடி பட்டுக்கொண்டிருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 லட்சம் வாக்கக்களைப்பெற்று நான் சிங்கள பெரும்பான்மையால் மட்டுமே தெரிவு செய்யப்பட்ட தலைவன் என்று கூறிக்கொண்டு துட்டகைமுனு பாணியில் நடக்க முற்பட்டவரை அந்த மக்களே ஓட்டிக்டகலைத்தார்கள். இவ்வாறான அசாத்திய நிலைகளை புரிந்து கொண்டதனால்தான் ஜனாதிபதி தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு பொதுத்தேர்தலை நடத்த விரும்பகிறார் என்று வைத்துக்கொண்டாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் சீர் நிலை தற்போது போதுமானதாக இருக்கிறதா என்று பரி சோதிக்கவேண்டியிருக்கிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல் கடந்த பொதுத்தேர்தலில் ஒரு ஆசனத்தை கூட சுதாகரிக்க முடியாத கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி ஆகிவிட்டது என்பது நகைப்புக்குரிய விடயந்தான்.
சாணக்கியரான ரணில் பொதுத்தேர் தலை நடத்த தீர் மானிதிதிருப்பதற்கான காரணம் ஜனாதி பதி தேர் தலில் உள்ள சவால்களை வெற்றி கொள்வதை விட பொதுத் தேர்தலை தனக்கு சாதகமாக்கி தன் நாட்டமுடைய ஒரு பலமான பாராளுமன்றை உருவாக்கி அதன்பின் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது புத்திசாலித்தனமான வேலையாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். எவ்வாறு இருப்பினும் இது ஒரு அக்னி பரீட்ஷையாகவே இருக்கும் என்பது அவர் அறியாத ஒரு விடயமல்ல. பொதுத்தேர் தலை நடத்துவதிலும் பல சிக்கல்கள் இருக்கிறது மாறாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதிலும் பல சவால்கள் இரக்கிறதென்பது வெளிப்படையாக தெரிந்தாலும் இன்றைய சூழ் நிலையை வைத்துக்கொண்டு எதையுமே தீர்மானிக்க முடியாது என்பதேயுண்மை.
நன்றி – அக்னியன்