அமெரிக்காவும் பிரிததானியாவும் புதிய வர்த்தக ஒப்பந்தம் – தங்கத்தின் விலையில் மாற்றம்

அமெரிக்காவும் பிரிததானியாவும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு தங்கம் விலை 0.8 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப்பும், பிரிததானிய பிரதமர் கியர் ஸ்டாமரும் புதிய உடன்பாட்டை அறிவித்தனர். பிரித்தானியாவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து 10 சதவீதம் வரி விதிக்கிறது.
அமெரிக்கப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 5.1 சதவீதத்தில் இருந்து 1.8 சதவீதமாக குறைக்க பிரிததானியா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் பொருட்களை வாங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கவும் அது இணங்கியிருக்கிறது.
வர்த்தகப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கம் விலை குறைந்திருப்பதாக நிதிச் சந்தைக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். வாரயிறுதியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உயர்நிலைப் பேச்சு நடக்கவுள்ளது.
அப்போது சீனாவுக்கான 145 சதவீதம் வரியை அமெரிக்கா குறைக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.