வட கடலில் இரு கப்பல்கள் மோதல் ! விபத்து நடந்த இடத்தில் அடர்ந்த புகை

வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டேங்கருடன் மோதியது. விபத்தில் சிக்கிய கப்பல்களில் இருந்த 30க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமெரிக்க நிறுவனமான க்ரோவ்லி, ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலின் ஆபரேட்டர் மற்றும் இணை உரிமையாளர் ஆகும். இந்த கப்பல் ஜெட் எரிபொருளை எடுத்துச் சென்றபோது, வட கடலில் சோலாங் கப்பலால் மோதி விபத்துக்கு உள்ளானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃப்ளோரிடாவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த விபத்தில் தீ பற்றி எரிந்தது மற்றும் ஜெட் எரிபொருள் கப்பலில் இருந்து வெளியானது. கப்பலில் பல வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஸ்டெனா இம்மாகுலேட் கப்பலில் இருந்தவர்கள் அதனை விட்டு வெளியேறினர். தற்போது ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் மற்றும் கணக்கிடப்பட்டுள்ளனர்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கொடியிடப்பட்ட 49,729 டெட்வெயிட் டன் (dwt) டேங்கர் ஸ்டெனா இம்மாகுலேட் மற்றும் போர்த்துகீசியம் கொடியிடப்பட்ட 9,322 dwt கொள்கலன் கப்பல் சோலாங் ஆகியவை இதில் ஈடுபட்டுள்ளன. டேங்கர் அமெரிக்க அரசாங்கத்தின் 10 திட்டங்களில் ஒன்றாகும்,
மோதல் சமயங்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லவும், தேசிய அவரச காலங்களில் எரிபொருட்கள் கொண்டு செல்லவும் இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
டேங்கரில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும், பெரிய அளவில் தீ பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் காட்டுகின்றன