நாற்பது கிலோ எலிக்கறியுடன் இருவர் கைது

கந்தளாய் நீர்த்தேக்கத்தில் எலிகள் மற்றும் ஏனைய வனவிலங்குகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்த இருவர் சந்தேகத்தின் பேரில் நாற்பது கிலோ எலிக்கறியுடன் இன்று (28) கைது செய்யப்பட்டதாக சீகிரிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கந்தளாய் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை நீண்ட காலமாக சுட்டு கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சீகிரியாவை சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழு ஒன்று கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு முன்பாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் இறைச்சியுடன் தப்பிச் சென்றதாகவும், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 25 times, 1 visits today)