நேட்டோவிலிருந்து ஸ்பெயினை வெளியேற்ற டிரம்ப் பரிந்துரை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை(09) ஸ்பெயின் தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க மறுத்ததற்காக நேட்டோவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
‘இதைச் செய்யாமல் இருக்க அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை’, ‘ஒருவேளை நீங்கள் அவர்களை நேட்டோவிலிருந்து வெளிப்படையாக வெளியேற்ற வேண்டும்’ என வெள்ளை மாளிகையில் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப்புடனான சந்திப்பின் போது ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரம்ப் ‘நீங்கள் ஸ்பெயினுடன் பேசத் தொடங்க வேண்டும்’, ‘நீங்கள் அவர்களை அழைத்து அவர்கள் ஏன் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
டிரம்பின் அழுத்தத்தின் கீழ், ஜூன் மாதம் நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் இராணுவ செலவினங்களை 2035க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்த ஒப்புக்கொண்டனர்.
ஆனால் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இவ் இலக்கை நிராகரித்தார், இது நமது நலன்புரி அரசு மற்றும் நமது உலகக் கண்ணோட்டத்துடன் பொருந்தாது என்று கூறினார்.