ஒரே நேரத்தில் இரு பலம்பொருந்திய நாடுகளை பகைத்துக்கொள்ளும் அமெரிக்கா!
வெனிசுலா மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய இரு எண்ணெய் டேங்கர் கப்பல்களை அமெரிக்கா இன்று கைப்பற்றியுள்ளது.
பனாமா கொடியுடன் பயணித்த சூப்பர் டேங்கர் எம் சோபியா (supertanker M Sophia) என்ற கப்பலையும், மரினேரா (Marinera)என்ற கப்பலையும் அமெரிக்க படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி சோபியா என்ற கப்பலானது ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் வெனிசுலாவில் இருந்து சீனாவிற்கு எண்ணெய் கொண்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மரினேரா (Marinera)என்ற கப்பல் ஈரானின் கச்சா எண்ணெயை சுமந்தப்படி ரஷ்யா நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஐஸ்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையேயான கடற்பரப்பில் வைத்து குறித்த கப்பல் கைப்பற்றப்படதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பலை கைப்பற்றுவதற்கு பிரித்தானியா உதவி செய்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் இந்த கூட்டு நடவடிக்கை ரஷ்யாவின் கோபத்தை தூண்டிவிடக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





