வட அமெரிக்கா

இளைஞர்களை பாதித்துவரும் மர்ம நோய்; கனடிய மருத்துவர்கள் கவலை

கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்துவருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பதுபோல் தோன்றச் செய்வது, தசைச் சிதைவு, பார்வை பிரச்சினைகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் சில நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த மூளை பிரச்சினை குறிப்பாக இளைஞர்களை பாதித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

நரம்பியல் நிபுணரான Dr. Alier Marrero மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கிளைபோசேட் என்னும் களைக்கொல்லி இந்த மூளை பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த களைக்கொல்லி, விவசாயம், காடுகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துமாறு, பாதிக்கப்பட்ட New Brunswickஐச் சேர்ந்த நோயாளிகள் குழு ஒன்று, பெடரல் மற்றும் மாகாண அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்