செயற்கை நுண்ணறிவால் ஏற்படவுள்ள மிக பயங்கர ஆபத்து – மறைக்கும் நிறுவனங்கள்

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியினால் ஏற்படவிருக்கம் மிக பயங்கர ஆபத்துகளை மென்பொருள் நிறுவனங்கள் மறைப்பதாக செய்யறிவின் தந்தை என அழைக்கப்படும் ஜெப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார்.
One Decision பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“பெரு நிறுவனங்களின் தலைவர்கள், வளர்ந்து வரும் செய்யறிவினால் ஏற்படவிருக்கும் மிகப் பயங்கர ஆபத்துகளைக் கண்டும் காணாமல் உள்ளனர். மூடிய கதவுகளுக்குள் அவற்றைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்து உணர்ந்திருந்தாலும் தொடர்ந்து மறைத்துவருகின்றனர்.
மிகப் பெரிய நிறுவனங்களில் இருப்பவர்கள், செய்யறிவு ஏற்படுத்தவிருக்கும் ஆபத்துகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை.
டெமிஸ் போன்றவர்கள் மட்டுமே அதன் ஆபத்துகளை உணர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேலும், செய்யறிவு அமைப்புகள் எவ்வாறு ஆபத்தான விகிதத்தில் பல்கிப் பெருகிவருகின்றன என்பதையும், ஆராய்ச்சியாளர்களால் கூட அதன் ஆபத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத வகையில் அது உள்ளது.
செய்யறிவு பல வேலைகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இது எதிர்பார்த்த வேகத்தைக் காட்டிலும் அதிகம்.
தன்னுடைய பணியின் ஆரம்ப காலத்தில், செய்யறிவு ஆபத்துகளை நான் முழுமையாக அறிந்துகொள்ளாமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்துவதாகவும் ஆனால் அதன் பிறகு என்ன நடக்கவிருக்கிறது என்ற அபாயத்தை அறிந்துகொண்டனர். ஆனால், எதிர்கால ஆபத்து வெகு தொலைவில் இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அப்போதே, பாதுகாப்பைப் பற்றி விரைவில் யோசித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக கூகுளில் பணியாற்றி வந்த ஹிண்டன் கடந்த 2023 ஆம் ஆண்டு பணியிலிருந்து வெளியேறினார். கூகுள், செய்யறிவை அதிகம் ஊக்கப்படுத்துவதை எதிர்த்துதான் அவர் பணியிலிருந்து வெளியேறியதாக அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை இப்போதைய பேச்சு மூலம் முற்றிலும் உண்மையல்ல என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.