சற்றுமுன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் தமன்னா.. கூடவே யாரெல்லாம் வந்திருக்காங்க தெரியுமா?

நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள் சற்றுமுன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு பாடகர் ஹரிஹரன்,நடிகை ரம்பா,நடன இயக்குனர் கலா மாஸ்டர்,நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)