மஹிந்தவின் “சலூன் கதவை” மூடிய நாமல்!
“எனது தந்தையின் காலத்தில் இருந்த சலூன் கதவு தற்போது மூடப்பட்டுவிட்டது. இனி கொள்கையுடன் ஒத்துப்போகின்றவர்களுக்கு மாத்திரமே கட்சி கதவு திறக்கப்படும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் மாற்று கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்குள் வளைத்துபோடப்பட்டனர். இதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசியல் ரீதியில் கோலோச்சியது. மறுபுறத்தில் இது தொடர்பில் விமர்சனங்களும் எழுந்தன. கட்சி தாவும் அரசியல் கலாசாரத்துக்கு மஹிந்த களம் அமைத்துவிட்டார் எனவும் […]




