ஐ.நா. அமைதி படைக்கு அதிகமானவர்களை அனுப்புவது குறித்து இலங்கை ஆராய்வு!
ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக […]




